Saturday, February 12, 2011

நான் காணும் எனது பெயர்

தாயின் கருவறை உட்சுவர்களில் உறங்கியத்திலிருந்து சுவாச சிற்றறைகளினை கடைசிமுறை  ஒக்ட்சிசன் முத்தமிடும் தருணம் வரை நரம்புகளில் மின்னோடம் பாய, நான் விழித்து கொண்டு இருக்கிறேன் என்று நினைத்து கொண்டே நாம் ஒவ்வருவரும் இந்த பூமியில் தூங்கிக்கொண்டிருக்கிறோம்.

மரணத்தில் விழிக்கும் தூக்கத்திட்கும், பிறப்பில் மூடும் கண்களுக்கும் இடையில் கனவாய் நமது ஆயுள்........

தூக்கத்தில்  2 வகை உண்டு ,
01- REM (Rapid eye movement sleep)
02-NREM (Non- Rapid eye movement sleep)

இந்த 2 வகையான தூக்கங்களிலும் கனவுகள் ஏற்படலாம் ஆனால், RER தூக்கத்தில் ஏற்படும் கனவுகள் மாத்திரமே தூக்கம் கலைந்த பின்பும் நினைவிட்கு வரும்.

ஆழ்மனதின் விம்பங்களே கனவுகள் எனலாம்.
"விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்த போதிலும்  மனதின் ஆழத்தினை புரிந்து கொள்ளவே முடிவதில்லை" என்று அடிகடி கேள்வி படுகிறேன் ஆனால் ஒவ்வருவனும்  காணும் கனவுகள் அவனுக்கு அவனது மனதின் ஆழத்தினை காட்டி கொண்டே இருக்கிறது....

நாம் தூங்கிக்கொண்டிருகிறோம். தூக்கத்தில் 3/4 NREM உம் 1/4 REM உம் மாறி மாறி வருகிறது, நம் மனதின் எண்ணங்களே கனவுகளாய் பிரதிபலிகின்றன ....

அழகிய கனவை காண்போம்.... மரணத்தில் சுகமாய் கண்விழிபோம்..

வாழ்வின் யதார்தங்களினை தூக்கத்தின் physiology யில் சும்மா தேடிப்பார்த்தேன்