Tuesday, January 29, 2013

STD யில் தலை குணிந்த தருணங்கள்...

     பலியலால் பரவும் நோய்கள் (sexually transmitted diseases), அறியாதவர்கள் யாருமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதனை பற்றிய விழிப்புணர்வுகளும், அதன் தாக்கமும் நம்மவர்களிடையே நிறையவே இருக்கிறது. HIV, Syphilis, Gonorrhea, Herpes, Hepatitis B, Candida, Chlamydia என்று அதன் வகைகள் விரிந்து கொண்டே செல்கிறது.

       இரண்டு கிழமை STD appointment முடிவில் STD பற்றியஅறிவுச்சுமை விட  மனதில் சமுகம் பற்றிய கவலைச்சுமையே அதிகமாக இருந்தது. நான் இதுவரை அறிந்திராத அரிதான உண்மைகளை அங்கு அறிந்து கொள்ள கூடியதாய் இருந்தது. STD MO சோபன அக்கா STD சம்மந்தமாக கேட்கும் கேள்விகளுக்கு விடை கூற முடிந்தாலும் , மட்டக்களப்பில் அதனது பரம்பல் பற்றி கூறும் போது தலை கவிழ்ந்து இருக்க வேண்டி இருந்தது (மனம், வேண்டும்  என்று எம்மை சீண்டுவதக்காக சொல்கின்றவோ  என்று  நினைக்கும் அளவுக்கு அந்த தகவல்கள் இருந்தது . அது பற்றி இன்னும் என்னுள் சந்தேகம் இருக்கிறது).

      எனது மனதிலுள்ள அழுத்தங்களினை குறைப்பதற்காகவும், நான் மறந்து விட கூடாது என்பதக்ககவும்  இங்கு எழுத்து வடிவில் மாற்றுகிறேன்.
01.மத்திய கிழக்கில் இருந்து வருபவர்களே அதிகம் STD தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

02.இதுவரை மட்டக்களப்பில் விபச்சாரம் ஒரு தொழிலாக இருக்க வில்லை ஆனால் அண்மை காலமாக அது ஒருதொழிலாக மாறி வருகிறது, அதக்கு உதாரணமாக வாழைச்சேனையில் ஒரு குடும்பமே விபசாரத்தினை தொழிலாக செய்து வருகிறது, இந்த தகவலினை அந்த விபச்சார குழுவில் இருந்த ஒரு 12 வயது சிறுமி கூறி உள்ளாள்.

03.HIV தொற்று positive ஆக உள்ள ஒரு முஸ்லிம் பெண் தலைமறைவாகி இருக்கிறாள்.

04.தனது  சொந்த மகளையே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளக்கிய தந்தை ஒரு உலமா.

 05.காத்தான்குடி டெலிகாம் வீதியில் கஞ்சாவினை கொத்து ரொட்டிக்குள் போட்டு  கொடுக்கும் கடை உள்ளது.

06.உல்லாச துறையின் அதித வளர்ச்சி STD யில் எற்படுத்த  இருக்கும் விளைவுகள்.


 கருவில் இருக்கும் சிசுவிலிருந்து அனுபவித்து முடிந்த வயோதிபம் வரை STD தன்னை வியாபித்திரிக்கிறது.இழிவான செயல்களின் விளைவுகளும் இழிவாகவே  முடியும் எனபதற்கு ஒரு உதாரணம் STD, குறிகளில் அதனது அறிகுறிகள் புண்களாக, சீல் களாக, எரிவுகளாக பிரதிபலிக்கின்றது.


  "தாய் செய்தது மகளை கேட்கும்", "கண்ணை திண்டவர்கள் "என்ற சொற்பதங்கள்  STD யில் நன்றாகவே பொருந்துகிறது , சில STD (gonorrhea) களுக்கு உள்ளக்கிய தாய்மாரின் பிறப்பு வழியில் உள்ள கிருமிகள் சிசுவின் கண்களினை தாக்கி ophthalmia neonatarum போன்ற நிலமைகளை உருவாக்கிறது. இந்த நிலையின் இறுதிக்கட்டம் குழந்தையின் கண்களைனை குருடாக்கும் வரை பார தூரமாக அமையலாம்.


  பிராந்திய  ரீதியில் STD சார்ந்த நோய்கள் தமக்கே உரித்தான சில சவால்கலினை எதிர் நோக்கயுள்ளன,

01. சமூக இழுக்கு (Social stigma) காரணமாக மக்கள் அறி,குறிகளினை வெளிபடுத்த தயங்குகின்றமை.
02. அறி,குறிகளினை அலச்சியமாக விட்டு விடுகின்றமை.
03.சிகிச்சை பெறுவதற்கான விசேட  நிலையங்களின் பற்றாக்குறை.
04.திட்டவட்டமான சிகிச்சை முறைகளின் பற்றாக்குறை. 
((05)).ஒப்பிட்டு ரீதியில் Venereologist (STD கான விசேட கற்கை துறை) களின் எண்ணிக்கை குறைவு.

மொத்தத்தில் STD Appointment வெறுமனே நோய்கள பற்றி அறிவினை மாத்திரம் தந்ததாக இல்லாமல், எதிர்காலத்தில் STD சமூகம் சார்ந்த மிக மோசமான விளைவிகளினை ஏற்படுத்தும் என்ற எதிர்வு கூறல்களிணையும்  வழங்கயுள்ளது.



குறிப்பு :

STD கட்டுப்பட்டு முறைகள் தனி ஒரு பகிர்வாக பகிரும் எண்ணம உள்ளது.