Thursday, August 30, 2012

என்ன கொள்ளுங்க மிஸ்ஸி... கொள்ளுங்க....

பிரசவ அறை ,உயிரை கொடுத்து உயிரை ஈனும் மயானம், வலிகளை சாதனைகளாக்கும்  வித்தைகளை, இந்த உலகமே தாய் தான் எனும் உயரிய தத்துவத்தினை உணர்த்தி நிற்கும்,புத்தகங்கள் சொல்லா ஆயிரமாயிரம் அர்த்தங்கள் சொல்லும் பள்ளிக்கூடம்..

விந்து, முட்டை உள்ளீடுகள் கருக்கட்டி, நுகமாக கருவறையில் தங்கி, சிசுவாக வெளி ஈடகிறதே  இதை விட  உற்பத்தி  பொறிமுறைக்கு வேறு என்ன விளக்கம் வேண்டும். உலகத்தில் அதி உற்ச வலி பிரசவ விலி தான். பிரசவத்திற்கு முன் தாயின் தாங்க முடியாத அழுகையையும், பிரசவத்தின் பின் குழந்தையின் இதமான அழுகையையும் கேக்கும் பொழுது... ஒரே அழுகை எனும் உணர்வுக்கு இத்தனை அர்த்தங்களா? என புலப்படுதும் அந்த பிரசவ அறை. அதற்கும் மேலாக பார்பவர்களையே அழவைக்கும் தருணங்களும் இல்லாமல் இல்லை,  மறித்து பிறக்கும் சிசுக்கள், தான் முயற்சித்தும் பயனில்லை என்று தெரிந்தும்  தன் வலியை போக்குவதற்காய் முக்கும் தாய்மார்கள், பிரசவிக்கும் போது ஒரு பிணத்தை சுமந்து இருக்கிறோமே என்ற உள்ள குமுறலுடன்.... "ஏன்டா பிள்ளைய காட்டுங்க மிஸ்... " எண்டு விம்மி விம்மி அழுது, உள்ளங்களில் இன்னும் வலியை ஏற்றும் தருணங்கள்.

மனித குலத்தின் வலி பல்வகைமை காணும் ஒரு தொகுதி பிரசவ அறை. பிரசவிக்கும் போதும் சிரிக்கும் முகங்கள், பிரசவத்திற்கு பல மணி நேரங்களுக்கு முன்னே அறையினை அலற வைக்கும் சத்தங்கள், வலியின் உச்சத்தில் வெளியாகும் வார்த்தைகள், "என்ன அம்மோ..." , "ஏன்டா அப்போ..", "என்ன கொள்ளுங்க மிஸ்ஸி...  கொள்ளுங்க..." இன்னும் எத்தனையோ .. தாம்பத்திய சுகத்தை வெறுக்கும் ஒரு உச்ச வலி அது.. ஒரு தாதி சொல்ல நான் கேட்டேன், " இப்ப இப்படித்தான் கத்துவின்கம்மா பிறகு அடுத்த வருசம் அடுத்த பிள்ளைக்கு வருவிங்க ", உலகில் நிகழும் பிறப்புக்கள் எல்லாமே வலியை சுகங்கள் ஜெயிக்கும் தருணங்கள். வாழ்க்கை ஒரு சக்கரம், தாம்பத்திய சுகத்தில் உண்டாகும் கரு, பிரசவ வலியில் முதல் மூச்செடுக்கும் சிசு, வலியில் இருந்து விடு பட்ட தாயின் சுகம், கிழிந்த பிறப்புறுப்பை தைக்கும் போது வலி, குழந்தைக்கும் முதல் பாலூட்டும் போது சுகம்.. இப்படி வலியும், சுகமும் மாறி மாறி. ஒரு தாயின் பிரசவத்தினை நீங்கள் பார்பீர்களாக  இருந்தால் என்றுமே உங்களது தாய்க்கு சந்தோசத்தை கொடுக்கும் பிள்ளைகளாகவே இருப்பீர்கள். 

பிரசவ  அறை மயானம் என்று சொன்னதுக்கு விளக்கம் இல்லாமல் இல்லை. தாயும், சிசுவும் தங்களை இணைத்த பிளசன்டாவினை சுடு கட்டில் எரிப்பதற்காக விட்டு செல்கிறார்கள். பிளசன்டாவிற்கு பயன்பாடுகள் பல இருந்து அது சுடு காடு செல்வது இன்னும் தவிர்க்க முடியாததாகவே உள்ளது. நண்பன் இம்ஜாத் சொன்னார், "உயிர் போர்த பார்க்கலாம்  போல இருக்கு, உயிர் பிறக்கிறத  பார்க்க இயலாமே இருக்கு "

வளர்ச்சி அடைந்த மருத்துவம் வலி இல்லாமல் பிரசவத்தினையும் வழங்குகிறது.. இன்னும் எவ்வளவோ வசதிகளை வழங்கயுள்ளது.
எழுத நினைத்தவைகளில் சில,
.
  • mid wifes, nurses, medical officers, VOG
    உன்னத சேவை.
  • ARM, Liqour(மீன் கழுவிய தண்ணி ),IOL, Instrumental deliveries
  • Episiotomy, suturing
  • Progression of internal examination
  • Partogram VS APGAR
  • கதை சொல்லும் CTG, PINARD, DOPPLER
  • twins
  • தாயை கொள்ளும் retained placenta



நினைக்க நினைக்க எழுதிக்கொண்டே இருக்கலாம் இந்த பிரசவ அறையில்.


27.08.2012 - 02.09.2012 OBS and GYNAE  Labour room
  

No comments:

Post a Comment